search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரி பாக்கி"

    • உடனடியாக செலுத்த ஆணையாளர் வேண்டுகோள்
    • குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை

    தூசி:

    செய்யாறில் உள்ள திருவத்திபுரம் நகராட்சி ஆணையாளர் கி.ரகுராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்ப தாவது:-

    திருவத்திபுரம் நகராட்சியில் சொத்து வரி, காலி மனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை என மொத்தம் ரூ.2 கோடியே 66 லட்சத்து 30 ஆயிரம் நிலுவை பாக்கியாக உள்ளது. நிலுவை பாக்கி அதிகமாக வைத்துள்ள காரணத்தினால் பொது மக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியாமல் உள்ளது.

    பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தினால் வசதியாக இருக்கும். இதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் வரி வசூல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும் திருவத்திபுரம் நகராட்சி அலுவலர்கள் அனைத்து வார்டுகளில் தீவிர வசூல் பணி யினை மேற்கொள்ள உள்ளனர்.

    வரிகளை செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் அனைத்து வரிக ளையும் உடனே செலுத்தி நகராட்சிக்கு உதவிட வேண்டும். இவ்வாறு'அதில் கூறப்பட்டுள்ளது.

    • நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
    • வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஒத்துழைக்க வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பழனி விடுத் துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி என மொத்தம் ரூ.1 கோடியே 26 லட்சம் வரி மற்றும் வரியில்லா இனங்களில் நகராட்சிக்கு வரி செலுத்தாமல் நிலுவையாக உள்ளது.

    வருகிற மார்ச் மாதம் 15-ந் தேதிக்குள் நிலுவை தாரர்கள் வரி இனங் களை சிரமமின்றி செலுத்துவதற்கு ஏதுவாக மார்ச் மாதம் 31-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட அனைத்து நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5 வரை நகராட்சியில் கணினி வசூல் மையம் செயல்படும்.

    மேலும் நிலுவைதாரர்கள் h://turbarepay.g என்ற இணையதளம் மூல மாகவும் ஜோலார்பேட்டை நகராட்சியை தேர்வு செய்து வரி மற்றும் வரியில்லாத இளங்களின் தொகையை உடனே செலுத்தவும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    வரி நிலுவை வைத்துள்ள நிலுவைதாரர்கள் உடனடியாக மார்ச் மாதம் 15-ந் தேதிக்குள் வரி பாக்கியை நிலுவையின்றி செலுத்தி ஜப்தி நடவடிக்கை, குடிநீர் இணைப்புதுண் டிப்பு மற்றும் நீதிமன்ற நடவடிக்கையை தவிர்க்குமாறும், நகராட்சியின் வளர்ச்சி பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள ஒத்துழைப்பு கொடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மீஞ்சூர் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
    • வரி பாக்கியை நீதிமன்றம் மூலமாகவும் நேரில் சென்று வசூலிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மீஞ்சூர் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் பேரூராட்சித் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ் தலைமையில் செயல் அலுவலர் வெற்றியரசு துணைத் தலைவர் அலெக்சாண்டர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் குடிநீர், மழை நீர், கால்வாய், மின்விளக்கு, சாலை அமைத்தல் மற்றும் வியாபாரிகள் 1988 முதல் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய 6.80 லட்சம் வரி பாக்கியை நீதிமன்றம் மூலமாகவும் நேரில் சென்று வசூலிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • மதுரை பஸ் நிலைய கடைகளில் கோடிக்கணக்கில் வரி பாக்கி செலுத்தாதது தகவல் அறியும் சட்டத்தில் அம்பலமானது.
    • அதிகபட்சமாக ரூ.20 லட்சம் முதல் வரி பாக்கி வைத்துள்ளது

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பனகல் சாலை ஆகிய 3 இடங்களில் பஸ் நிலையங்கள் செயல்படுகிறது. இங்கு மாநகராட்சிக்கு சொந்தமாக 317 கடைகள் உள்ளன.

    இதில் அரசு போக்கு வரத்து கழக அலுவலகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, ஏ.டி.எம். மையம் உட்பட 277 கடைகள் இயங்கி வருகின்றன. மதுரை 3 பஸ் நிலையங்களில் உள்ள சுமார் 277 கடைகள் வாடகை, வரி செலுத்துகிறதா? என்பது தொடர்பாக சமூக ஆர்வலர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

    இதற்கு மாநகராட்சி தகவல் தொடர்பு அதிகாரி பதிலளித்துள்ளார். அதில், மேற்கண்ட 3 பஸ் நிலையங்களில் உள்ள வியாபார கடை உரிமையாளர்கள் ரூ.1 கோடியே 69 லட்சத்து 87 ஆயிரத்து 370-க்கு வரி பாக்கி வைத்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    3 பஸ் நிலையங்களில் ஒரே நபருக்கு 3, 4 கடைகள் வாடகைக்கு வழங்கப்பட்டிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை பஸ் நிலையங்களில் செயல்படும் சில கடை உரிமையாளர்கள் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் முதல் வரி பாக்கி வைத்துள்ளது இந்த சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

    வரி பாக்கி வைத்து உள்ள வியாபாரிகளிடம் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து பாக்கியை வசூல் செய்ய வேண்டும். அல்லது அவர்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்

    • கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் வாடகை பாத்திரம் குடோன் உரிமையாளர் சொத்து வரி கட்டாததால் கடைக்கு சீல் வைத்து கடும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • வரி வசூல் செய்வதற்கு நூதன முறையில் குப்பை தொட்டிகளை வள்ளியம்மை பஜார் முன்பு வைக்கப்பட்டன.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி, குடிநீர் வரி, மாநகராட்சி கடை வாடகைகள் உள்ளிட்ட பல்வேறு வரிகளை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையில், அதிகாரிகள் தீவிர வரி வசூல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் வாடகை பாத்திரம் குடோன் உரிமையாளர் சொத்து வரி கட்டாததால் கடைக்கு சீல் வைத்து கடும் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி சார்பில் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வரிகள் மற்றும் மாநகராட்சி கடை வாடகையை உடனடியாக கட்ட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்‌. இந்த நிலையில் கடலூரில் மிக முக்கிய சாலையாக இருந்தவரும் லாரன்ஸ் சாலையில் வள்ளியம்மை பஜார் உள்ளது.

    இங்குள்ள ஒரு சில கடைகளுக்கு சொத்து வரி பாக்கி இருப்பதாக மாநகராட்சி சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு, வரி கட்ட வேண்டும் என வலியுறுத்தப் பட்டு வந்தனர். இன்று காலை கடலூர் மாநகராட்சி சார்பில் வரி வசூல் செய்வதற்கு நூதன முறையில் குப்பை தொட்டிகளை வள்ளியம்மை பஜார் முன்பு வைக்கப்பட்டன. இதனை பார்த்த வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பொதுமக்கள் வியாபாரிகள் உள்ளிட்ட யாரும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வியாபாரிகள் தரப்பில் கடலூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். கடலூர் மாநகராட்சியில் தற்போது 78 கோடிக்கு மேல் வரி பாக்கி உள்ள நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் வசூலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நூதன முறையில் வியாபாரிகள் வரி கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பரமக்குடி நகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • நகராட்சியில் வரி வசூல் 100 சதவீதம் இருந்தால் மட்டுமே நகர வளர்ச்சிக்கு தேவையான திட்ட பணிகளை உடனுக்குடன் செய்ய முடியும் என்றார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, காலியிட வரி, குத்தகை பாக்கியை நீண்ட நாட்கள் கட்டாமல் வைத்துள்ளவர்களின் பெயர் பட்டியல் விவரங்களை நாளிதழ்கள், விளம்பர பதாதைகள் மூலம் வெளியிடப்படும் என நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் எச்ச ரித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகளில் வசிக்கும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நகராட்சி நிதியில் இருந்து மேற்கொள்ள திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சி மூலம் அறிவிப்புகள் வழங்கியும், நகராட்சி பணி யாளர்கள் தொடர்ந்து வலி யுறுத்தியும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், உடனுக்குடன் செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது.நகராட்சி சட்ட விதி களின்படி ஒவ்வொரு ஆண்டும் முதல் அரை யாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 31-ந் தேதிக்குள், 2-ம் அரை யாண்டுக்கான சொத்து வரியினை அக்டோபர் 30-ந் தேதிக்குள்ளும் நகராட்சிக்கு செலுத்த வேண்டும். நகராட்சியில் வரி வசூல் 100 சதவீதம் இருந்தால் மட்டுமே நகர வளர்ச்சிக்கு தேவையான திட்ட பணிகளை உடனுக்குடன் செய்ய முடியும்.

    எனவே சொத்து வரி விதிப்புதாரர்கள், குடிநீர் கட்டண நிலுவைதாரர்கள், காலிமனை வரி நிலுவை தாரர்கள் கடை மற்றும் குத்தகைதாரர்கள் தொழில் வரி இதர கட்டணங்களை நகராட்சிக்கு செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள அனைவரும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை 7 தினங்களுக்குள் நகராட்சி கருவூலத்தில் செலுத்த வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வரி வசூல் மையம் செயல்படும்.அதே நேரம் அறிவிப்பு கள், தொடர் அறிவிப்பு கள் மூலமும் நகராட்சி பணியாளர்களால் பல முறை வலியுறுத்தியும், இதுவரை வரி மற்றும் கட்டணம் செலுத்தாத நிலுவைதாரர்களின் பெயர் பட்டியல், நாளிதழ்கள் மற்றும் விளம்பர பலகை மூலம் வெளியிட்டும் 1920-ம் ஆண்டு மாவட்ட நகராட்சிகளின் சட்ட பிரிவுகளின் படி ஜப்தி மற்றும் சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வரி பாக்கி செலுத்தாத நிறுவனங்களுக்கு சீல் நகரசபை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • 30-ந் தேதிக்குள் செலுத்தாவிட்டால் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும், குடிநீர் இணைப்புகளை துண்டிக்கப்போவதாகவும் தலைவர் தெரிவித்தார்.

    சிவகங்கை

    மாவட்ட தலைநகராக இருக்கும் சிவகங்கை 27 வார்டுகளை கொண்ட நகராட்சியாக உள்ளது. இங்கு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று நகராட்சி தலைவராக சிவகங்கை தி.மு.க. செயலாளர் துரைஆனந்த் தேர்வு செய்யப்பட்டார்.

    தற்போது சிவகங்கை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது.

    நகராட்சி நிர்வாகத்திற்கு தொழில், குடிநீர், பாதாள சாக்கடை மற்றும் வீட்டு வரி பாக்கி, குத்தகை பாக்கி மட்டும் ரூ.5 கோடி நிலுவையில் உள்ளதால் நகராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக நகர்மன்ற தலைவர் தெரிவித்தார்.

    இந்த வரி பாக்கிகளை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தாவிட்டால் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும், குடிநீர் இணைப்புகளை துண்டிக்கப்போவதாகவும் தலைவர் தெரிவித்தார்.

    மேலும் வரிப்பாக்கி உள்ளவர்களின் பெயர்களை நகராட்சி அலுவலக வாயிலில் பிளக்ஸ் பேனர்களாக வைக்க உள்ளதாகவும் நகரசபை தலைவர் தலைவர் துரைஆனந்த் தெரிவித்தார்.

    ×